முகப்பு
உலகம்

நேபாளத்திற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கிய இந்தியா

இருநாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாக நேபாளம் நாட்டிற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்திய அரசின் சார்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 22 ஏப்ரல், 2021 at 3:48 PM
நேபாளத்திற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கிய இந்தியா
பகிர்:

இருநாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாக நேபாளம் நாட்டிற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்திய அரசின் சார்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கரோனா தொற்று நோய்க்கு எதிரான நேபாளத்தின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக இந்திய அரசின் சார்பில்  வெண்டிலேட்டர்கள், அவசர மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட 39 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியத் தூதரக அதிகாரிகள் 39 ஆம்புலன்ஸ் வாகனங்களையும், 6 பள்ளி வாகனங்களையும் நேபாள அதிகாரிகளிடம் வழங்கினர்.

Advertisement

முன்னதாக கடந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 151ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 41 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஆறு பள்ளி பேருந்துகளை நேபாளத்திற்கு இந்தியா வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.