முகப்பு
உலகம்

ரஷியாவில் புதிதாக 8,996 பேருக்கு கரோனா பாதிப்பு

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,996 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 22 ஏப்ரல், 2021 at 3:05 PM
ரஷியாவில் புதிதாக 8,996 பேருக்கு கரோனா பாதிப்பு
பகிர்:

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,996 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ரஷியாவில் கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது, 

அதன்படி, புதிதாக 8,996 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் இதுவரை 4,73,6,121 பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும், ஒரே நாளில் 397 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 107,103 ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் மாஸ்கோவில் ஒரேநாளில் 2,704 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுளள்னர். 

இதனிடையே, தொற்று பாதித்த 8,934 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 4,36,1,807 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.