முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் தினசரி பாதிப்பு புதிய உச்சம்: ஒரேநாளில் 5,026 பேருக்கு கரோனா

பாகிஸ்தானில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை இன்று மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

பாகிஸ்தானில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை இன்று மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது.

இதுகுறித்து அந்நாட்டில் இருந்து வெளியாகும் செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,026 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அதிகபட்ச பாதிப்பாக 5,112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

தற்போது 5 மாதத்திற்கு பிறகு மீண்டும் தினசரி பாதிப்பு 5ஆயிரத்தை கடந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 62 பேர் பலியாகியுள்ளனர் இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 23,422ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.