பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கரோனா தொற்று
பாகிஸ்தானில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு மருத்துவ ஆய்வுத் துறை தெரிவித்திருக்கிறது .
பாகிஸ்தானில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு மருத்துவ ஆய்வுத் துறை தெரிவித்திருக்கிறது .
தற்போது நாள்தோறும் புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4,000 த்தை தாண்டி உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,722 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை
இந்நிலைலயில் நாடு முழுக்க சிகிச்சையில் இருக்கும் 78,595 பேரில் 3,858 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் நேற்று ஒரே நாளில் 46 பேர் கரோனாவால் பலியானார்கள் என்றும் இதுவரை தொற்றால் 10.47 லட்சம் பேர் பாதிப்படைந்திருந்தப்பதாகவும் அதில் 9.45 லட்சம் பேர் நோயிலிருந்து மீண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
மேலும் மக்களுக்கு விரைவாக கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது எனவும் கூறியிருக்கிறார்கள் .