உலகம்

மலேசியப் பிரதமருக்கு புதிய சிக்கல்: ஆட்சியில் தொடர்வாரா?

DIN

மலேசியாவில் ஆளும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கூட்டணிக் கட்சி திரும்பப் பெற்றுள்ள நிலையில் பிரதமர் முகைதீன் யாசின் ஆட்சியில் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மலேசியாவில் கூட்டணிக் கட்சியான ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பின் ஆதரவில் பிரதமர் முகைதீன் யாசின் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் அக்கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகைதீன் யாசினுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளனர். 

இதனால் அவர் ஆட்சியில் தொடர்வதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள முகைதீன் யாசின் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் தான் பதவி விலகப் போவதில்லை எனத் தெரிவித்தார். 

மேலும் அடுத்த மாதத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டதில் அதிருப்தியை சந்தித்துள்ள முகைதீன் யாசினுக்கு தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது அந்நாட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT