உலகம்

இந்தோனேசியா : கரோனாவால் 640 மருத்துவர்கள் பலி 

DIN

இந்தோனேசியாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவின் நோய்த் தொற்றுக்கு ஆளாகி 640 மருத்துவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்நாட்டின் மருத்துவ கூட்டமைப்பு நேற்று ( புதன்கிழமை) அளித்த தகவலில்,  கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை 640 மருத்துவர்கள் கரோனாவால் பலியாகி இருக்கிறார்கள்.  இதில் 535 ஆண் மருத்துவர்களும், 105 பெண் மருத்துவர்களும் அடக்கம் . அவர்களில்  பொதுசிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் 347 பேர் என்றும் , சிறப்பு மருத்துவர்கள் 284 பேர்  எனத் தெரிவித்தனர்.

கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளான கிழக்கு ஜாவாவில் 140 மருத்துவர்களும் , மத்திய ஜாவாவில் 96 பேரும் , ஜகர்தாவில் 94 பேரும் ,  மேற்கு ஜாவாவில் 94 பேரும் இறந்திருக்கிறார்கள்.

இதுவரை இந்தோனேசியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 30.80 லட்சம் பேர். அதில் உயிரிழந்தவர்கள் 80,598 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT