முகப்பு
உலகம்

தாய்லாந்தில் அரசுக்கு எதிராகப் போராட்டம்

மோசமான முறையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதாகக் கூறி தாய்லாந்தில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
தாய்லாந்தில் அரசுக்கு எதிராகப் போராட்டம்
பகிர்:

மோசமான முறையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதாகக் கூறி தாய்லாந்தில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

தாய்லாந்து நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்தவண்ணம் உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலகக் கோரி தலைநகர் பாங்காக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கைகளில் பிரதமர் பதவி விலகக்கோரி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் செல்லும் பாதையை அடைத்த காவலர்கள் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டத்தைக் கலைத்தனர்.

தாய்லாந்தில் இதுவரை 7,36,522 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,066 பேர் தொற்று பாதிப்பினால் பலியாகியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →