ரஷியாவில் புதிதாக 22,160 பேருக்குத் தொற்று; மேலும் 769 பேர் பலி
ரஷியாவில் புதிதாக 22,160 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 769 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
ரஷியாவில் புதிதாக 22,160 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 769 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,160 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 1,916 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை.
அதிகபட்சமாக மாஸ்கோவில் 2,150 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,69,910 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் மேலும் 769 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,65,650 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 5,34,279 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 14,474 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 57,69,981 ஆக உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உறங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?