முகப்பு
உலகம்

ஈரானில் மீண்டும் புதிய உச்சம்: ஒரேநாளில் 655 பேர் கரோனாவுக்கு பலி

ஈரானில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனா நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:


ஈரானில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனா நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

620 பேர் நோய்த் தொற்றால் பலியானதாக ஞாயிற்றுக்கிழமை பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 655 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளதாக திங்கள்கிழமை பதிவாகியுள்ளது.

ஈரானில் 5 நாள்கள் பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

நாட்டில் 40 சதவிகிதத்துக்கும் குறைவான மக்களே முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவதாக ஈரான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மொத்த மக்கள்தொகையில் சுமார் 4 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.