முகப்பு
உலகம்

நைஜீரியா : பேருந்து விபத்தில் 21 பேர் பலி

நைஜீரியா நாட்டின் ஜிகாவா பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) பேருந்தும் லாரியும் எதிர்பாராத விதமாக  வெள்ளத்தில் விழுந்ததில் அதில் பயணித்த   21 பேர் நீரில் மூழ்கி  உயிரிழந்தனர் 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
நைஜீரியா : பேருந்து விபத்தில் 21 பேர் பலி
பகிர்:

நைஜீரியா நாட்டின் ஜிகாவா பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) பேருந்தும் லாரியும் எதிர்பாராத விதமாக  வெள்ளத்தில் விழுந்ததில்அதில் பயணித்த   21 பேர் நீரில் மூழ்கி  உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு நைஜீரியாவின் கிராமமான ரதாபியில் பேருந்தும் பதிவு செய்யப்படாத லாரியும் உடைந்த கல்வெட்டின் இடையில் நுழைந்து வெள்ளத்தில் சிக்கியது. இதில் பயணித்தவர்களில் 21 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் , ' ஓட்டுநர்கள் கவனமின்றி அதிக எடையுடன் வாகனங்களை  மோசமான சாலைகளில் இயக்குவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுவரை இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' எனத் தெரிவித்தார்.

நடந்த விபத்து குறித்து விசாரணை செய்யப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →