ஆப்கனில் விமானத்திலிருந்து கீழே விழுந்த விவகாரம்: அமெரிக்கா விசாரணை
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற அமெரிக்க விமானப்படையின் விமானத்தில் தொங்கியபடி சென்றவர்கள் பலியான விவாகாரத்தை விசாரிக்க கோரி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற அமெரிக்க விமானப்படையின் விமானத்தில் தொங்கியபடி சென்றவர்கள் பலியான விவாகாரத்தை விசாரிக்க கோரி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.
ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். மேலும், காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படையின் விமானத்தில் இடம் கிடைக்காததால் வெளிபுறத்தை பலர் தொற்றிக் கொண்டனர். தொடர்ந்து விமானம் புறப்பட்டதால், வானில் பறக்கும்போது கீழே விழுந்து 3 பேர் பலியாகினர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள அமெரிக்கா அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.