கோப்புப்படம் 
உலகம்

அஷ்ரஃப் கனி முக்கியத்துவத்தை இழந்துவிட்டார்: அமெரிக்கா கருத்து

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி முக்கியத்துவத்தை இழந்துவிட்டார் என அமெரிக்க தெரிவித்துள்ளது.

DIN

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி முக்கியத்துவத்தை இழந்துவிட்டார் என அமெரிக்க தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அஷ்ரஃப் கனியால் இனி முடிவுகளை எடுக்கு முடியாது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வெண்டி ஷெர்மன்க் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் தஞ்சமுடைந்துள்ளாரே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு வெண்டி பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கனி கூறியுள்ள நிலையில், அமெரிக்காவின் இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த 2014 முதல் 2021 ஆகஸ்ட் 15 வரை, அமெரிக்காவின் உதவியோடு ஆப்கானிஸ்தானில் கனி ஆட்சி நடைபெற்றுவந்தது. ஆப்கானிஸ்தானை விட்டு கனி வெளியேறியுள்ள நிலையில், முன்னாள் அதிபர் கர்சாயுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT