அஷ்ரஃப் கனி 
உலகம்

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பண பரிமாற்றம் நடைபெற்றதா?: ஆப்கன் முன்னாள் அதிபர் வெளியிடும் பரபரப்பு தகவல்கள்

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பெரிய அளவில் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு ஆப்கானிஸ்தான் முன்னாள் அஷ்ரஃப் கனி மறுப்பு தெரிவித்துள்ளார்.

DIN

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பெரிய அளவில் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு ஆப்கானிஸ்தான் முன்னாள் அஷ்ரஃப் கனி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி அந்நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பெரிய அளவில் பணத்தை எடுத்து சென்றதாக கனி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதற்கு பிறகு முதல் முறையாக பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தலிபான்களுக்கும் முன்னாள் அரசு அலுவலர்களுக்கிடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதற்கு முன்பு பணத்தை எடுத்து சென்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதேபோல், வளைகுடா நாடுகளிலேயே இருக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் தாய்நாடு திரும்புவது குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஆப்கானிஸ்தான் சட்டங்களை பாதுகாக்க முயற்சி மேற்கொண்டுவருகிறேன். ரத்தக்களரி ஏற்படுவதை தடுக்கவே நான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன்.

தலிபான்கள், முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் ஆகியோருக்கிடையேயான பேச்சுவார்த்தை வெற்றிபெற வேண்டும். எனது காலணிகளை விடுத்து பூட்ஸ் போட்டு கொள்ளக் கூட நேரமில்லை. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெறுங்கைளுடன்தான் வந்துள்ளேன்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT