முகப்பு
உலகம்

ஆஸ்திரேலியாவில் கைமீறிச் சென்ற கரோனா நிலை

கரோனா பெருந்தொற்று பரவ தொடங்கிய காலத்திலிருந்து மோசமான சூழலை ஆஸ்திரேலியா சந்தித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா பெருந்தொற்று பரவ தொடங்கிய காலத்திலிருந்து மோசமான சூழலை ஆஸ்திரேலியா சந்தித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று பரவ தொடங்கிய காலத்திலிருந்து மோசமான சூழலை ஆஸ்திரேலியா சந்தித்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு பதிவாகியிருந்த கரோனா பரவலை காட்டிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது. டெல்டா வகை கரோனா ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து வரை பரவியுள்ளது.

நியூ செளத் வேல்ஸில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 681 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அம்மாநில பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு மேலாக அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. 

விக்டோரியாவில் நேற்று விட இரண்டு மடங்கு அதாவது புதிதாக 57 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து ஆறாவது முறையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நியூ செளத் வேல்ஸ், விக்டோரியா, ஆஸ்திரேலியா தலைநகர் பகுதி ஆகிய மூன்று இடங்களில் மொத்தமாக 754 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது இன்று தெரியவந்தது.

தீவிரமாக பரவக் கூடிய டெல்டா வகை கரோனாவை ஊரடங்கு மூலம் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா திணறி வருகிறது. இதுகுறித்து கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "டெல்டா வகை கரோனாவுடன் வாழ அனைவரும் கற்று கொள்ள வேண்டும். ஊரடங்கை தளர்த்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரபடுத்த வேண்டியிருக்கிறது" என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →