பாகிஸ்தானில்  இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் - 400 பேர் மீது வழக்குப் பதிவு 
உலகம்

பாகிஸ்தானில்  இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் - 400 பேர் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் மாநிலம் லாகூரில் கடந்த ஆக-14 ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவை பதிவு செய்யச் சென்ற இளம்பெண்ணை அங்கிருந்த ஆண்கள் அப்பெண்ணின் ஆடைகளை கிழித்து பாலியல் சீண்டல்களை செய்தனர் 

DIN

பாகிஸ்தான் மாநிலம் லாகூரில் கடந்த ஆக-14 ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவை பதிவு செய்யச் சென்ற இளம்பெண்ணை அங்கிருந்த ஆண்கள் அப்பெண்ணின் ஆடைகளை கிழித்து பாலியல் சீண்டல்களைச்  செய்த காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தன்னுடைய யூடியூப் பக்கத்தில் விழாவைப்   பதிவு செய்யச் சென்ற பெண்ணிற்கு நடந்த இந்தக்  கொடூரத்திற்கு  சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்ததோடு , குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்  , ' சுதந்திர தினமன்று விழாவை பதிவு செய்ய அங்கு சென்றிருந்தேன். திடீரெனெ அங்கிருந்த ஆண்கள் சிலர் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர் . பின் பயத்தில் பக்கத்தில் இருந்த பூங்காவிற்குச் சென்றேன். துரத்திக்கொண்டு வந்தவர்கள் என் ஆடைகளைக் கிழித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி தூக்கிப்போட்டு விளையாடத் தொடங்கினர்.மேலும் என்னுடைய செல்போனையும் , 1.5 லட்சம் மதிப்புள்ள மோதிரத்தையும் பிடிங்கிக்கொண்டார்கள் ' எனத் தெரிவித்திருக்கிறார். 

அதனால் அன்று அந்த பகுதியில் கூடியிருந்த 400 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாத்மா காந்தி நினைவு நாள்! RN Ravi மரியாதை!

இது தெரியுமா? தொலைபேசியை எடுத்தவுடன் ஹலோ என்று சொல்வது ஏன்?

சேட்டன் வருகிறார் வழி விடுங்க... சாம்சனுக்குப் பாதுகாவலராக மாறிய சூர்யகுமார்!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறி; உரிய நேரத்தில் கூட்டணி அறிவிப்பு! - பிரேமலதா விஜயகாந்த்

அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு நாப்கின் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT