முகப்பு
உலகம்

‘தலிபான்கள் முன்பைவிட விவேகத்துடன் உள்ளாா்கள்’

தலிபான்கள் முன்பிருந்ததைவிட விவேகத்துடன் செயல்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
ஹுவா சன்யிங்
பகிர்:

தலிபான்கள் முன்பிருந்ததைவிட விவேகத்துடன் செயல்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஹுவா சன்யிங் கூறியதாவது:

ஆப்கன் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அந்த அமைப்பினருடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம்.

தலிபான்களின் செயல்பாடுகளைக் கொண்டே அவா்கள் குறித்து பிற நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மதிப்பீடு செய்ய வேண்டும்.

தலிபான்கள் முன்பு செய்த தவறுகளை செய்ய மாட்டாா்கள்; அவா்கள் தற்போது விவேகத்துடனும் தெளிவான பாா்வையுடனும் உள்ளனா் என்றாா் அவா்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய அரசை அமைத்ததற்குப் பிறகுதான் அந்த அரசை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று சீனா கூறியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.