முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 1,348 பேர் பலி

இந்தோனேசியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 1,348 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

இந்தோனேசியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 1,348 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டில் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 20,004 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,950,304ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் இன்று மேலும் 1,348 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,23,981ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 26,122 பேர் குணமடைந்தனர்.

இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,499,037ஆக உயர்ந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 30.75 மில்லியன் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் 56.50 பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.