உலகம்

ஆப்கானிஸ்தானிலிருந்து 85 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

DIN

தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து 85 இந்தியர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் சொந்த நாடு அழைத்து வரப்படுகின்றனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு உள்ள வெளிநாட்டவர்களின் நிலை கவலைக்குள்ளாகியுள்ளது. தலைநகர் காபூலிலிருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்க பல்வேறு நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட இந்திய விமானப் படை சி-130ஜே ரக விமானத்தின் மூலம்  காபூலில் இருந்த 85 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.

மேலும் காபூலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் 17ஆம் தேதி காபூலில் இருந்து 129 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT