உலகம்

இலங்கையில் அமலுக்கு வந்தது பொதுமுடக்கம்

DIN

அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக இலங்கையில் அடுத்த 10 தினங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கடைகளில் குவிந்தனர்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு உலக நாடுகளும் தீவிரமாக போராடி வருகின்றன. எனினும் அடுத்தடுத்த கரோனா அலையால் முன்பை விட தொற்று பரவல் அதிகரித்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் இலங்கையில் டெல்டா வகை கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் நாடு முழுவதுமான பொதுமுடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவுமுதல் விதிக்கப்பட்ட பொதுமுடக்கமானது 10 நாள்களுக்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை 3,72,079 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,604 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர். பொதுமுடக்கத்தின் போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது, மருத்துவப் பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்டவை முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT