இந்தோனேசியா: 40 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு
இந்தோனேசியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 40 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
இந்தோனேசியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 40 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 19,106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,08,166-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 1,038 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,28,252-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.