தடுப்பூசி செலுத்திய ஆறு மாதத்திற்குள் செயல்திறன் குறைவு: பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள்
தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆறு மாதத்திற்குள் கரோனாவுக்கு எதிரான அதன் செயல்திறன் குறைகிறது என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆறு மாதத்திற்குள் கரோனாவுக்கு எதிரான அதன் செயல்திறன் குறைகிறது என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பைசர்/பயோஎன்டெக், ஆக்ஸ்போர்டு/ஆஸ்ட்ராஜெனேகா ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஆறே மாதத்தில் அதன் செயல்திறன் குறைய தொடங்குகிறது என பிரிட்டன் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்வது அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தடுப்பூசி செலுத்தப்பட்ட ஐந்து முதல் ஆறு மாதங்களில் கரோனாவுக்கு எதிரான பைசர் தடுப்பூசியின் செயல்திறன் 88 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக குறைகிறது என பிரிட்டன் ZOE COVID ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பொறுத்தவரையில் செலுத்தப்பட்ட நான்கு முதல் ஐந்து மாதங்களில் அதன் செயல்திறன் 77 சதவிகிதத்திலிருந்து 67 சதவிகிதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ZOE COVID ஆய்வின் முதன்மை ஆய்வாளர் டிம் ஸ்பெக்டர் கூறுகையில், "மோசமான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், வயதானவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால் கிடைக்கும் பாதுகாப்பு குளிர்காலத்திற்குள் 50 சதவிகிதத்திற்கு கீழ் குறையும்.
எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை தேவைப்படுவது இதன் மூலம் தெரிகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து பரவல் அதிகரிப்பதை கண்டு அமைதியாக இருக்க முடியாது" என்றார்.
இதையும் படிக்க | உத்தரப் பிரதேசம் : விவசாயிகள் போராட்டத்தால் 40 ரயில்கள் ரத்து
வயதானவர்களுக்கும் கரோனா ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்களுக்கும் செப்டம்பர் மாதத்திலிருந்து பூஸ்டர் டோஸ் வழங்குவது அவசியமாகிறது என தடுப்பூசி ஆலோசகர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.