குடிநீர் ரூ.3000: உணவு ரூ.7400: காபூலில் எகிறிய விலையால் மக்கள் அவதி 
உலகம்

குடிநீர் ரூ.3,000: உணவு ரூ.7,400: காபூலில் எகிறிய விலையால் மக்கள் அவதி

ஆப்கன் தலைநகர் காபூலில் உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

DIN

ஆப்கன் தலைநகர் காபூலில் உணவு மற்றும் நீர் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தததைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் அகதிகளாக பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். உலக நாடுகளும் அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டு மக்களை அழைத்து வர தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. தலைநகர் காபூலில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் ரூ.3 ஆயிரத்திற்கும், உணவு ரூ.7400க்கும் விற்பனையாவதாக தெரிய வந்துள்ளது.

அத்தியாவசியமான உணவு மற்றும் குடிநீரின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். காபூலில் உணவு மற்றும் தண்ணீரை வாங்க மக்கள் வரிசைகட்டி நிற்பது காண்போரை கலக்கமடையச் செய்துள்ளது.

முன்னதாக ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் இக்கட்டான சூழல் காரணமாக மக்கள் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் பஞ்சத்தில் சிக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா. அவை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

கனவில் வாழ்பவள்... பரமேஸ்வரி!

அழகின் சம்மேளனம்... சமந்தா!

SCROLL FOR NEXT