துபை : உலகின் மிகப்பெரிய ராட்டினம் விரைவில் திறப்பு 
உலகம்

துபை : உலகின் மிகப்பெரிய ராட்டினம் விரைவில் திறப்பு

மேற்காசிய நாடுகளில் மிகப்பெரிய வளர்ச்சியைக்  கண்டிருக்கும் நாடான துபையில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

DIN

மேற்காசிய நாடுகளில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கும் நாடான துபையில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

அதில் புதிய முயற்சியாக  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் உலகின் மிகப்பெரிய  ராட்டினத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

தற்போது  அதன் அதிகாரப்பூர்வ திறப்பு விழா வரும் அக்டோபர் -21 ஆம் தேதி நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

லண்டன் ஐ   ராட்டினத்தை விட இரு மடங்கு பெரியதான இது  உலகிலேயே பெரிய ராட்டினம் ஆகும். 250 மீட்டர் நீளம் கொண்ட இந்த ராட்டினத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் , சந்திப்புகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் இதை பயன்டுத்திக்கொள்ளலாம் என அந்நாட்டு சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ராட்டினத்தில் ஒரு சுற்றை நிறைவு செய்ய 38 நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT