நைஜீரியா : தீவிரவாத தாக்குதலில் 35 பேர் பலி
சமீப காலங்களாக நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதல்களும் , ஆள் கடத்தல்களும் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசிற்கு தலைவலியாக இப்பிரச்சனைகள் உருவாகியிருக்கிறது.
சமீப காலங்களாக நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதல்களும் , ஆள் கடத்தல்களும் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசிற்கு இப்பிரச்சனைகள் தலைவலியாக உருவாகியிருக்கிறது.
கடந்த ஆக-12 ஆம் தேதி இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 22 பேர் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து தற்போது நேற்று (ஆக-25) அந்நாட்டின் பிளாட்டி மாகாணத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் 35 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
இதையும் படிக்க | பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 903 பேர் பலி; புதிதாக 30,671 பேருக்குத் தொற்று
இதுகுறித்து அம்மாநில ஆளுநர் சைமன் லாலோங் ' எல்வா செங்கம் கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 35 பொதுமக்கள் இறந்திருக்கிறார்கள். தாக்குதல் நடத்தியவர்களில் 10 பேரை கைது செய்திருக்கிறோம் . மேலும் மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஒருநாள் ஊரடங்கும் அமல்படுத்த இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.