காபூல் விமான நிலையம் 
உலகம்

காபூலில் மீண்டும் விமான சேவை தொடக்கம்

காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலால் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

DIN

காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலால் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து கடந்த 10 நாள்களாக தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் சர்வதேச நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை குண்டுவெடிப்பு நடந்தது. காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், 108 பேருக்கு மேல் பலியாகினர்.

இதையடுத்து, பாதுகாப்புக் கருதி நேற்று இரவு முதல் காபூல் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், மீட்புப் பணிகள் முடங்கின.

தற்போது, காபூல் விமான நிலைய பாதுகாப்புக் கட்டுக்குள் வந்ததையடுத்து, மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதந்திர நாள்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

திகட்டாத தேன்... சரண்யா ராமச்சந்திரன்!

தெரு நாய்களை அப்புறப்படுத்த இடைக்காலத் தடை இல்லை: தீர்ப்பு ஒத்திவைப்பு!

குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள்..! யுஇஎஃப்ஏ கண்டனம்!

ஏலகிரி மலைமக்களுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

SCROLL FOR NEXT