முகப்பு
உலகம்

ஆப்கனில் இருந்து இதுவரை 1 லட்சம் பேர் மீட்பு: அமெரிக்கா தகவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 7,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 7,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுவதுமாக  கைப்பற்றியுள்ளனர். மேலும் தலிபான்கள், அங்கு ஆட்சியமைப்பதற்கான பல்வேறு பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

இதையடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரங்களை காலி செய்த பல்வேறு நாடுகள் தங்களுடைய நாட்டினரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து கிழக்கு நேரப்படி நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரையிலான 12 மணி நேரத்தில் 7,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் இதுவரை 1,00,100 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஜூலை முதல் 1,05,700 பேரை ஆப்கனில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே, திட்டமிட்டபடி ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 31க்குள் முழுவதுமாக வெளியேற்றப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட இரு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க கடற்படை வீரா்கள் 12 போ் உள்பட 72 போ் கொல்லப்பட்டனா்; 140-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.