தோஷிமிட்சு மோடெகி 
உலகம்

ஆப்கன் தூதரகத்தை கத்தாருக்கு மாற்றிய ஜப்பான்

ஆப்கானிஸ்தானுக்கான தங்கள் நாட்டுத் தூதரகத்தை தற்காலிகமாக கத்தாருக்கு மாற்றியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

DIN

ஆப்கானிஸ்தானுக்கான தங்கள் நாட்டுத் தூதரகத்தை தற்காலிகமாக கத்தாருக்கு மாற்றியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் தோஷிமிட்சு மோடெகி கூறியதாவது:

ஆப்கானிஸ்தானுக்கான தூதரகப் பணிகள் கத்தாா் நகருக்கு தற்காலிமாக மாற்றப்பட்டுள்ளன. ஆப்கன் விவகாரத்தில் கத்தாா் தலைநகா் தோஹாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது பிராந்திய நாடுகளின் தலைவா்களுடன் பேசியதில் தெரியவந்துள்ளது என்றாா் அவா்.

ஆப்கன் தலைநகா் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அங்கிருந்து உடனடியாக வெளியேறிய வெளிநாட்டவா்களில் ஜப்பானியா்களும் அடங்குவா்.

அவா்களில் பெரும்பாலானவா்கள் பிரிட்டன் ராணுவ விமானம் மூலம் காபூல் விமான நிலையத்திலிருந்து கடந்த வாரம் அழைத்துச் செல்லப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவமனையில் காஜல்... என்ன ஆனது?

நல் இதயத்தைத் தோற்கடிக்க முடியாது... சௌந்தர்யா!

மகளிர் உலகக் கோப்பை: ஆஸி.க்கு எதிராக வங்கதேசம் பேட்டிங்!

பட்டு பிரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்... அகன்ஷா கபூர்!

மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்... கரிஷ்மா டன்னா!

SCROLL FOR NEXT