விமானத்தில் ஏறும் மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹூ 
உலகம்

ஆப்கனைவிட்டு வெளியேறிய கடைசி அமெரிக்க ராணுவ வீரர் யார்?

ஆப்கானிஸ்தானிலிருந்து கிளம்பிய இறுதி விமானத்தில் கடைசியாக ஏறிய அமெரிக்கர் மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹூ என அமெரிக்க ராணுவம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

ஆப்கானிஸ்தானிலிருந்து கிளம்பிய இறுதி விமானத்தில் கடைசியாக ஏறிய அமெரிக்கர் மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹூ என அமெரிக்க ராணுவம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு தலிபான்களுக்கு எதிராக அமெரிக்காவின் நேட்டோ கூட்டுப் படைகள் சண்டையிட்டு வந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் புதிதாக பதவியேற்ற அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் 31-க்குள் ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி, ஆப்கனிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட்ட போதும், காபூல் விமான நிலையம் மட்டும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

நேற்றுடன் மீட்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்ததையடுத்து, காபூலில் பாதுகாப்புப் பணியிலிருந்த அமெரிக்க ராணுவத்தினரை ஏற்றிக் கொண்டு கடைசி விமானமாக சி-17 கிளம்பியது.

இந்த விமானத்தில் கடைசி ராணுவ வீரராக அமெரிக்க மத்திய கமெண்டின் 82வது ஏர்போர்ன் கமெண்டர் மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹூ ஏறியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

SCROLL FOR NEXT