உலகம்

ஒமைக்ரான் பதற்றம்: ஐரோப்பிய நாடுகளில் கடுமையாகும் பயண நெறிமுறைகள்

DIN

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ள கரோனா தொற்று கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் பயண நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் குறையாத போது ஒமைக்ரான் எனும் புது வகை தொற்று உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக தென் ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா , ஜப்பான் போன்ற 20 நாடுகளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டிருப்பதால் அந்நாடுகளிலிருந்து விமானம் மூலம் பயணிப்பவர்களுக்கு கடும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பாவில் சில நாடுகள் ஒமைக்ரான் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல நெறிமுறைகளை மேற்கொள்ள இருக்கிறது. முக்கியமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பயணங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரம் சுற்றுலாவிற்கு ஐரோப்பா வரும் பயணிகளும் வரும் நாட்களில் தடை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT