இனி வாரத்தில் நாலரை நாள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு நாடுகள் அறிவிப்பு 
உலகம்

இனி வாரத்தில் நாலரை நாள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு நாடுகள் அறிவிப்பு

அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து வாரம் 4.5 நாள் மட்டுமே வேலை நேரம் இருக்கும் என ஐக்கிய அரபு நாடுகள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

DIN

அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து வாரம் 4.5 நாள் மட்டுமே வேலை நேரம் இருக்கும் என ஐக்கிய அரபு நாடுகள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா , அபுதாபி, சார்ஜா, துபை, அஜ்மன், உம்-அல்-குவைன் மற்றும் புஜைராவில் வருகிற 2022, ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய பணி நேரம் அறிமுகமாக இருக்கிறது.

அதன்படி , திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 முதல் மாலை 3.30 வரை 8 மணி நேர பணியும் , வெள்ளிக்கிழமை காலை 7.30 முதல் மதியம் 12 வரை 4.30 மணி நேர பணியும் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளி மதியம் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி , ஞாயிறு உள்பட 2.5 நாள்கள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் குடும்பத்தை கவனிக்கவும் இந்த புதிய பணி திட்டம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள்  மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

தற்போது, அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை மட்டுமே விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலைக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கல்குவாரியை மூட வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து அதிமுகவினா் பிரசாரம்

காளையால் சேதமடைந்த வாகனத்தை சரிசெய்துதரக் கோரி தகராறு

நாம் இந்தியா் கட்சிக்கு ஸ்பேனா் சின்னம்!

SCROLL FOR NEXT