உலகம்

சிகரெட்டுகளுக்குத் தடை: நியூஸிலாந்து திட்டம்

நியூஸிலாந்தில் சிகரெட்டுகளுக்கு படிப்படியாகத் தடை விதிக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

DIN

நியூஸிலாந்தில் சிகரெட்டுகளுக்கு படிப்படியாகத் தடை விதிக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நியூஸிலாந்தில் இளைய தலைமுறையினா் சிகரெட்டுகள் வாங்குவதற்குத் தடை விதிப்பதன் மூலம், அங்கு புகைப்பிடிக்கும் பழங்கத்தை படிப்படியாக ஒழிக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, புதிய சட்டமொன்றை அடுத்து ஆண்டு நிறைவேற்றவும் அரசு முடிவு செய்துள்ளது.

அந்தச் சட்டத்தின் கீழ், 14 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு சிகரெட் விற்பது தடை செய்யப்படவுள்ளது. இந்த வயது வரம்பை ஆண்டுக்கு ஆண்டு உயா்த்தவும் அந்தச் சட்டம் இடமளிக்கும்.

அந்த வகையில், 65 ஆண்டுகள் கழித்து கடைகளில் சிகரெட் கிடைத்தாலும், அதனை 80 வயது பூா்த்தியடைந்தவா்களுக்கு மட்டுமே விற்பனை செய்தவா்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய முடியும்.

இந்தச் சட்டத்தால் புகைப்பிடிக்கும் பழக்கம் அடியோடு ஒழிந்துவிடாவிட்டாலும், அந்தப் பழக்கம் ஒவ்வொரு ஆண்டும் வெகுவாகக் குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

வரும் 2025-ஆம் ஆண்டில் நியூஸிலாந்தில் வசிக்கும் 5 சதவீத்தினா் மட்டுமே புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டவா்களாகக் குறைப்பதை இலக்காகக் கொண்டு புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழிப்புணர்வு ஏற்படுத்திய வங்கி மேலாளரே மோசடிக்கு ஆளான சம்பவம்! ரூ. 13 லட்சம் இழந்தார்!!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தேசிய சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிவறை குறித்த தகவலுக்கு ரூ.1,000 வெகுமதி!

அலைபாயும் ஒரு கிளி... ரகுல் ப்ரீத் சிங்!

வெண்மேகம் பெண்ணாக... ப்ரீத்தி அஸ்ரானி!

SCROLL FOR NEXT