உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

PTI


ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஃப்ளோரெஸ் தீவுப் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக, சுனாமி அலைகள் எழும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தோனேசியாவில் ஃப்ளோரெஸ் தீவுப் பகுதியில் நேரிட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவாகியிருந்தது.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியில், 18.5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்தது. கிழக்கு நௌஸா டெங்கரா மாகாணத்தில் சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட மிகப்பெரிய தீவான மௌமரேவின்  நகரப்பகுதியிலிருந்து 112 கி.மீ. தொலைவில் வடக்கே இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. 

தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி இது பற்றி கூறுகையில், இப்பகுதியில் வசித்தவர்கள், நிலநடுக்கத்தைக் கடுமையாக உணர்ந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் செய்திகளில், மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததும், கட்டடங்களிலிருந்து ஏராளமான மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

எனினும், விரைவுப் படையினர், பாதிப்பு நிலவரங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT