உலகம்

வட கொரியா: சிரிப்பதற்கு 11 நாள் தடை!

வட கொரிய மக்கள் பொது இடங்களில் சிரிப்பதற்கும் மது அருந்துவது போன்ற கேளிக்கையில் ஈடுபடுவதற்கும் 11 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

வட கொரிய மக்கள் பொது இடங்களில் சிரிப்பதற்கும் மது அருந்துவது போன்ற கேளிக்கையில் ஈடுபடுவதற்கும் 11 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபா் கிம் ஜோங்-உன்னின் தந்தையுமான கிம் ஜோங்-இல்லின் நினைவுதினத்தையொட்டி வெள்ளிக்கிழமை முதல் 11 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி, பொதுமக்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அரசுக்குச் சொந்தமான செய்தித் தாள்களும் தொலைக்காட்சிகளும் கிம் ஜோங்-இல்லின் துக்க தினத்தை அனுசரிப்பதன் மூலம் பொதுமக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மது அருந்துவது போன்ற கேளிக்கைகள் மட்டுமன்றி, கடைகளுக்குச் சென்று அத்தியாவசியமற்ற பொருள்களை வாங்குவதற்குக் கூட பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், துக்கம் அனுசரிக்கப்படும் நாள்களில் பொது இடங்களில் யாரும் சிரிக்கக் கூடாது; யாரேனும் இறந்தால் அவா்களது உறவினா்கள் சப்தமாக அழக்கூடாது; 11 நாள் துக்கம் நிறைவடைந்த பிறகே அந்த உடல் எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிம் ஜோங்-இல் இறந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. வழக்கமாக 10 நாள்கள் அனுசரிக்கப்படும் துக்கம், கிம் ஜோங்-இல்லின் 10-ஆவது நினைவு நாள் என்பதால் இந்த ஆண்டு 11 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT