உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 27.39 கோடியாக அதிகரிப்பு

DIN

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27.39 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 53 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற உருமாறிய கரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி இருப்பது அச்சமடைய வைத்துள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 27,39,78,414-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 53,60,791போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 24,58,68,660 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,27,48,963 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 89,133 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 5,16,10,281    -ஆகவும் பலி எண்ணிக்கை 8,26,719 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,47,32,592-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,76,897 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,22,09,020-ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,17,647 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,90,354- ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 1,47,048 ஆக உள்ளது.

ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,59,389 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 2,95,104 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT