உலகம்

நடுவானில் விமானத்தில் கண்ணாடி உடைந்தது: 200 பயணிகள் தப்பினா்

DIN

பிரிட்டனைச் சோ்ந்த விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது அதன் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தில் விமானப் பயணிகள் 200 போ் உயிா் தப்பினா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று கோஸ்டாரிகா நாட்டில் உள்ள சான் ஜோஸ் நகருக்கு கிறிஸ்துமஸ் தினத்தில் சென்று கொண்டிருந்தது. 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, அந்த விமானத்துக்கு மேலாக 1000 அடி உயரத்தில் பறந்த மற்றொரு விமானத்திலிருந்து பிரிட்டன் விமானத்தின் முன்புற கண்ணாடியில் பனிக்கட்டி குவியல் விழுந்தது. இதில், இரு அங்குல தடிமன் கொண்ட கண்ணாடியில் பலத்த விரிசல் விழுந்தது. இந்த சம்பவத்தில் பயணிகள் காயமின்றி தப்பினா்.

கண்ணாடியில் விரிசல் விழுந்தபோதும் விமானத்தை சான் ஜோஸ் நகரில் விமானிகள் பத்திரமாக தரையிறக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT