உலகம்

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து 38 போ் பலி

DIN

சூடானில் தங்கச் சுரங்கம் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்ததில் 38 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: சூடான் தலைநகா் காா்டோமுக்கு தெற்கே 700 கி.மீ. தொலைவில் ஃபுஜா என்ற கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான தங்கச் சுரங்கம் உள்ளது. செயல்படாத இந்தச் சுரங்கம் மூடப்பட்டுள்ளது. அந்தச் சுரங்கத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினா் அங்கிருந்து சென்ற நிலையில், உள்ளூரைச் சோ்ந்த சுரங்கத் தொழிலாளா்கள் அச்சுரங்கத்துக்குள் சென்றுள்ளனா். அப்போது சுரங்கம் இடிந்து விழுந்ததில் 38 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். அவா்களில் 8 போ் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கச் சுரங்கங்கள் மிகுந்த சூடானில் பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததால், இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

சிதம்பரத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT