முகப்பு
உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 10.35 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10.35 கோடியாக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
Globally, corona damage increases to 10.35 crore
பகிர்:

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10.35 கோடியாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

திங்கள்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 10,35,28,864 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 22,16,311 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 7,51,30,289 பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,23,77,799 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,07,961 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Advertisement

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,67,67,229 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 4,52,279ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,07,58,619 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,54,428 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 92,04,731 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,24,534 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments