நியூசிலாந்தில் கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்
நியூசிலாந்து நாட்டில் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரிப்பில் உருவான கரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நியூசிலாந்து நாட்டில் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரிப்பில் உருவான கரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்புக்கு எதிராக பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் நடவடிக்கையில் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் முதல் கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் மார்ச் மாத இறுதிக்குள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலை ஆரம்பம் முதலே நியூசிலாந்து கட்டுக்குள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.