முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் கரோனா தொற்றால் 303 மருத்துவர்கள் பலி

இந்தோனேசியாவில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை 303 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
இந்தோனேசியாவில் கரோனா தொற்றால் 303 மருத்துவர்கள் பலி
பகிர்:

இந்தோனேசியாவில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை 303 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக உலகின் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்களப் பணியார்களாகப் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களும் தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தோனேசியாவில் இதுவரை கரோனா தொற்று பாதிப்பால் 303 மருத்துவர்கள் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 81 முதல் 85 வயதுக்கு உள்பட்ட 6 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்.

2021 ஜனவரி மற்றும் 2020 டிசம்பர் மாதம் முறையே 55 மருத்துவர்கள் மற்றும் 55 மருத்துவர்கள் இறப்பை பதிவு செய்துள்ளன.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா, ஜகார்த்தா, மத்திய ஜாவா, மேற்கு ஜாவா மற்றும் வடக்கு சுமத்ரா ஆகிய பகுதிகளில் அதிகபட்ச இறப்புகள் பதிவாகி உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.