முகப்பு
உலகம்

ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 9 தலிபான்கள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
(கோப்புப்படம்)
பகிர்:

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய மாகாணமான உருஸ்கானில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அந்நாட்டு ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தலிபான் அமைப்பினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 9 தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.