இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் பதவியிலிருந்து விலகக்கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் பதவியிலிருந்து விலகக்கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா தொற்று பாதிப்பை பொறுப்பற்ற வகையில் கையாண்டதாகக் கோரி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக அந்நாட்டில் போராட்டம் வலுத்து வருகிறது.
மத்திய ஜெருசலேமில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
பெஞ்சமின் பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர்.