ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1ஆகப் பதிவு
கிழக்கு ஜப்பானின் கடற்கரையில் சனிக்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிழக்கு ஜப்பானின் கடற்கரையில் சனிக்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் புகுஷிமா மாகாணத்தில் 60 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்க பாதிப்பால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை.