உலகம்

ஜப்பானில் 93 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று

DIN

ஜப்பான் நாட்டில் புதிதாக 93 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா வைரஸ் அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில் பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் ஜப்பான் நாட்டில் வெள்ளிக்கிழமை 93 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு ஜப்பானின் கான்டோ பகுதியில் 91 பேருக்கும், விமான நிலைய பரிசோதனையில் 2 பேருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த புதிய வகை கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பான் தலைமை அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கடோ வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மேலும் இந்த புதிய வகை கரோனா தொற்று பரவலால் நாட்டில் மேலும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது.

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து இதுவரை 151 புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT