உகாண்டா: மண்சரிவில் சிக்கி 8 பேர் பலி
உகாண்டா நாட்டின் புவ்வேஜூவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர்.
உகாண்டா நாட்டின் புவ்வேஜூவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர்.
உகாண்டா நாட்டின் புவ்வேஜூ பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.