இந்தியாவில் 4 பேருக்கு தென் ஆப்பிரிக்கா வகை கரோனா 
உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 11.26 கோடியாக உயர்வு 

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.26 கோடியாக உயர்ந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது. 

IANS

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.26 கோடியாக உயர்ந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

புதன்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 11.26 கோடி பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 24,96,749 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 8,82,39,672 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,19,17,725 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 92,218 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,88,97,718 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5,14,996 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,10,30,176 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,56,598 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,02,60,621 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,48,646 பேர் பலியாகியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவியம்... நந்திதா ஸ்வேதா!

இரு நாயகிகள், ஒரு நாயகன் - பழைய கதையில் புதிய தொடர்!

ஓணம் ஸ்பெஷல்... நிவேதா தாமஸ்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஜு ஜனதா தளம் புறக்கணிப்பு!

ஹூண்டாய் ரெய்டு: அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்! - டிரம்ப்

SCROLL FOR NEXT