முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 3 பெண்கள் பலி

இந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பெண்கள் பலியானார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

இந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பெண்கள் பலியானார்கள்.

இந்தோனேசியாவில் சுலவேசி மாகாணத்தில் செயல்பட்டு வந்த சட்ட விரோத தங்கச் சுரங்கில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தின்போது 23 பேர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் மண்ணில் புதைத்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் 15 பேரை உயிரிருடன் மீட்டனர். 3 பெண்கள் பலியானார்கள். 

மேலும் மாயமான 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.