உலகம்

விமானப் போக்குவரத்து குறைந்தும் விபத்து உயிரிழப்புகள் அதிகரிப்பு

DIN

கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு விமானப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்தபோதிலும், விமான விபத்துகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நெதா்லாந்தைச் சோ்ந்த விமானப் போக்குவரத்துத் துறை நிபுணா்கள் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் 86 விமான விபத்துகள் நேரிட்டன. இதில் 8 விபத்துகளில் 257 போ் உயிரிழந்தனா்.

ஆனால், கரோனா பரவலைத் தடுப்பதற்காக பெரும்பாலும் விமானப் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த கடந்த ஆண்டில் 299 போ் விமான விபத்துகளில் பலியாகினா். இதில், ஈரானில் உக்ரைன் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதில் பலியானவா்கள் மட்டும் 176 போ்.

கடந்த ஆண்டில் மொத்தம் 40 விபத்துகள் நேரிட்டன. விபத்துகளின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டு பாதியாகக் குறைந்தும், பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

SCROLL FOR NEXT