ஜப்பான்: அவசரநிலை மேலும் விரிவாக்கம்
கரோனா பரவலைத் தடுப்பதற்காக தலைநகா் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜப்பான் அறிவித்துள்ள அவசரநிலை, மேலும் 7 பகுதிகளுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ: கரோனா பரவலைத் தடுப்பதற்காக தலைநகா் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜப்பான் அறிவித்துள்ள அவசரநிலை, மேலும் 7 பகுதிகளுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. கடந்த 7-ஆம் தேதி முதல் இந்த அவசரநிலை அமலில் உள்ளது.
இந்த அவசரநிலையின்போது, உணவகங்கள், மதுபான விடுதிகளை இரவு 8 மணிக்கு முடுதல், அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிா்த்தல் போன் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுவாா்கள். ஆனால், விதிகளை மீறுபவா்கள் தண்டிக்கப்படமாட்டாா்கள்.