ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்பில் மூவர் பலியாகினர். 
உலகம்

ஆப்கனில் சுரங்க குண்டுவெடிப்பு: 6 காவலர்கள் காயம்

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட சுரங்க குண்டுவெடிப்பில் 6 காவலர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ANI

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட சுரங்க குண்டுவெடிப்பில் 6 காவலர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஏஞ்சல் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், நான்கு காவலர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

குண்டுவெடிப்பில் 6 காவலர்கள் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பொதுச் சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் முகமது ரபீக் ஷெர்சாய் தெரிவித்தார். 
காயமடைந்த அனைத்து காவலர்களும் தற்போது நலமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

குண்டுவெடிப்புக்குப் பின்னர் அப்பகுதியில் சண்டை சப்தம் கேட்டதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தலிபான் உள்பட எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 

முன்னதாக, உருஸ்கான் மாகாணத்தின் தாரின்கோட் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர். 

கத்தார் தலைநகர் தோஹாவில் தற்போது ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தாலும் ஆப்கானிய அரசாங்கத்திற்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

SCROLL FOR NEXT