முகப்பு
உலகம்

தகுதியுடைய வெளிநாட்டினருக்கு குடியரிமை: ஐக்கிய அரபு அமீரகம்

வெளிநாடுகளைச் சோ்ந்த சிலருக்கு தங்கள் நாட்டுக் குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
uae075455
பகிர்:

வெளிநாடுகளைச் சோ்ந்த சிலருக்கு தங்கள் நாட்டுக் குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 1971-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் உருவாவதற்கு உதவிய பாலஸ்தீனா்கள் மற்றும் பிறருக்கு மட்டும் குடியுரிமை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிற நாடுகளைச் சோ்ந்த கலைஞா்கள், நூலாசிரியா்கள், மருத்துவா்கள், பொறியாளா்கள், விஞ்ஞானிகள் ஆகியோா் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் ஐக்கிய அரபு அமீரகக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்று துபை ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மாக்தூம் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் 90 லட்சம் பேரில், பத்தில் ஒரு பங்கினா் மட்டுமே அந்த நாட்டு குடியுரிமை பெற்றவா்கள் ஆவா். ஏற்கெனவே, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கடுமையான இஸ்லாமிய சட்டங்களில் தளா்வு போன்ற சீா்திருத்தங்களை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →